பிரபலமான இடுகைகள்

வெள்ளி, 25 ஏப்ரல், 2025

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது எப்படி?

 

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள தேவைக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது. அதீத புரத உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். நமக்கு தேவையான கலோரியின் அளவை காட்டிலும் நாம் அதிக உணவை உட்கொள்ளும்போது அது கொழுப்பாக கல்லீரலில் சேர்கிறது. 


நமக்கு தேவையான கலோரியை பொருத்து உணவை உட்கொள்ள பழகிக் கொண்டால் கல்லீரலில் கொழுப்பு சேராது.


இனிப்புகள், உருளைக் கிழங்கு, குளிர்பானங்கள், மூன்று வேளை அரிசி என அதிக கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும். அதே சமயம் கார்ப்போஹைட்ரேட் எடுத்து கொள்ளும் அளவுக்கு இணையாக புரதத்தையும் எடுத்து கொள்ள வேண்டும். 


பருப்புகள், பயிறு, கடலை, தோல் நீக்கப்பட்ட கோழி கறி, மீன், முட்டை வெள்ளைக் கரு, பால் என புரதம் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ள வேண்டும்.


புரத உணவுகளை அதிகம் எடுத்து கொண்டு, கார்போஹைட் ரேட் உணவை குறைத்து கொள்ள வேண்டும்.
அதேபோல நடைபயிற்சி மிக அவசியம். ஏனென்றால் முன்னர் சொன்னது போல நமது உடலுக்கு எத்தனை கலோரிகள் தேவை என்பது நமக்கு தெரியாது. 


எனவே தேவையில்லாத கலோரிகளை குறைப்பதற்கு உடற்பயிற்சி அவசியம். மூன்று நான்கு கிலோ மீட்டர் தூரம் நடந்தாலும் போதும்.


மொத்தத்தில் என்ன தேவையோ அந்த அளவிற்கு உணவை உட்கொள்ள வேண்டும். எடுக்கும் உணவு ஆரோக்கியமானதா என்பதை பார்த்து கொள்ள வேண்டும். முறையான நடைபயிற்சி வேண்டும். 


இதை சரியாக கடைப்பிடித்தால், கல்லீரலுக்கு மட்டுமல்ல நமது இதயம், நுரையீரல், மூட்டுகளுக்கும் நல்லது. ஆரோக்கியமான வாழ்வை நம்மால் பெற முடியும்.
-
நன்றி- பிபிசி.காம்


சிம்புவுக்கு நான் எப்போதும் ‘நோ’ சொல்ல மாட்டேன்: STR 49 படத்தில் நடிப்பதை உறுதி செய்த சந்தானம்..!

 

நடிகர் சிம்பு நடிக்க உள்ள 49வது படத்தில், காமெடி நடிகராக தனக்கே உரித்தான கதாபாத்திரத்தில் சந்தானம் களமிறங்க உள்ளதாக, இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது, இந்த தகவலை சந்தானம் தனது சமீபத்திய பேட்டியில் உறுதி செய்துள்ளார்.

அவர் கூறியதாவது: STR 49 படத்துக்காக சிம்பு நேரிலேயே எனக்கு அழைப்பு கொடுத்தார். 'நான் ஒரு படம் பண்றேன், அதில் நீங்களும் நடிக்கணும்' என்றார். அவர் கேட்டதும், தயங்காமல் உடனே ஒத்துக்கொண்டேன். அந்த அளவுக்கு, சிம்புவிடம் எனக்கு மரியாதையும் நன்றியும் இருக்கு."

"சிம்பு என்னை அழைத்ததுமே, வேறெந்த யோசனையும் இல்லாமல் ஒகே சொல்லிட்டேன். ஏற்கனவே வேறொரு படத்துடன் பேச்சுவார்த்தை நடந்துக்கொண்டிருந்தாலும், அந்த தயாரிப்பாளரிடம் நேரில் மன்னிப்பு கேட்டு அனுமதி பெற்ற பிறகு, சிம்புவின் படத்தில் சேர்ந்தேன். எங்கள் கூட்டணி மீண்டும் திரையில் வேற லெவலாக உங்களுக்காக காத்திருக்குது!" என உணர்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சந்தானம்.

இந்நிலையில், ‘STR 49’ படத்தில் சந்தானம் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பது தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Edited by மஹேந்திரன்- வெப்துனியா

எலிகள் அடகாசம்ட